அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு புத்தாக்க முகாம் நடந்தது.;

Update: 2022-07-06 12:52 GMT

ஊட்டி

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை செஸ் விளையாட்டில் மேம்படுத்துவதற்காக அரசு பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல் கட்டமாக விளையாட்டு குறித்து பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன் தொடங்கி வைத்தார். செஸ் போட்டிகள் பள்ளிகளில் நடத்துவது குறித்து மாவட்ட உடற்கல்வி அலுவலர் ராஜேஷ் விளக்கம் அளித்தார். இதில் 70 அரசு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் செஸ் விளையாட்டு விதிகள், நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது மேலும் மாணவர்களுக்கு செஸ் விளையாட்டை எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்றும், அவர்களை திறமையானவர்கள் மாற்றுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் செஸ் விளையாடி மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்