கூலி தொழிலாளி கிணற்றில் பிணமாக மீட்பு

கூலி தொழிலாளி கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2022-06-07 19:44 GMT

முசிறி, ஜூன்.8-

முசிறி அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். கூலி தொழிலாளியான இவர் கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்து மாயமானார். குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் சந்திரசேகரன் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலையில் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். அவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து சந்திசேகரனின் மகன் ராஜசேகரன் கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்