திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்பு

திருவேற்காடு அருகே கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

Update: 2022-09-10 08:49 GMT

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகள் மீட்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கத்தில் உள்ள பழமையான கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருவேற்காடு நகராட்சி பணியாளர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் நேற்று அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோவில் நிலத்தை மீட்டனர்.

அந்த நிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடிசைகள், கட்டுமானப்பொருட்களும் அகற்றப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

அந்த இடத்தில், கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது. இதையொட்டி திருவேற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்