அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் மீட்பு

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.;

Update: 2023-04-28 17:20 GMT

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டது.

அருணாசலேஸ்வரர் கோவில் இடம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்னை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இவற்றில் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்து சமய அறநிலையத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை துராபலி தெருவில் உள்ள வல்லப விநாயகர் கோவில் பின்புறம் 8 ஆயிரத்து 600 சதுர அடி இடம் உள்ளது. இதன் இப்போதைய மதிப்பு ரூ.5 ேகாடி ஆகும்.

இந்த இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்தும், கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை பல வருடங்களாக செலுத்தாமலும் இருந்து வந்து உள்ளனர்.

கோர்ட்டில் வழக்கு

இது குறித்து இந்து சமய அறநிலைய துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் இந்த இடத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சுவாதீனப்படுத்தி கொள்ள தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் கோர்ட்டு அமினாக்கள் முன்னிலையில் அந்த இடம் மீட்கப்பட்டு கோவில் இணை ஆணையர் குமரேசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

அப்போது இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள கடைகளில் இருந்து பொருட்களை கோவில் ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அதன்பிறகு கடை உரிமையாளர்களே பொருட்களை எடுத்து சென்றனர்.

சீர்படுத்த வேண்டும்

மீட்கப்பட்ட இந்த இடத்தை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சீர்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்