அரசு பஸ்சில் கிடந்த தங்க நகை மீட்பு
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் கிடந்த தங்க கொலுசு மீட்கப்பட்டது.
நாகர்கோவில்:
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்த அரசு பஸ்சில் கிடந்த தங்க கொலுசு மீட்கப்பட்டது.
மதுரையில் இருந்து நாகர்கோவிலுக்கு நேற்று காலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டு வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தை வந்ததும், பயணிகள் அனைவரும் இறங்கினர். அப்போது கண்டக்டர் பஸ்சின் முன் பகுதியில் உள்ள ஒரு இருக்கையின் கீழே தங்க நகை கிடப்பதை கண்டார். பஸ்சில் பயணம் செய்த பயணி யாரோ ஒருவர் நகையை தவற விட்டது தெரியவந்தது. இதனைதொடர்ந்து பஸ்சில் கிடந்த தங்க நகையை கண்டக்டர் மீட்டு நாகர்கோவில் மண்டல கிளை மேலாளர் கண்ணனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து பஸ்சில் நகையை தவறவிட்ட பயணி யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.