ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்க்கப்பட்டது.

Update: 2022-12-15 19:07 GMT

கிருஷ்ணராயபுரம் அருகே திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட செக்கணம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிமிப்பு செய்து வைத்திருந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தனர். இதையடுத்து கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் விசாரணை நடத்தியதில், அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது. இதையடுத்து தாசில்தார் உத்தரவின்பேரில், திருக்காம்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் குறுந்தொகை, வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தனிநபர் செய்து வைத்திருந்த ஆக்கிரமிப்பை அகற்றி அரசு நிலத்தை மீட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்