அந்தியூர் அருகே, நீரோடை பகுதியில் 1¼ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

1¼ ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Update: 2022-06-07 19:00 GMT

அந்தியூர் அருகே நீரோடை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 1¼ ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீட்டனர்.

ஆக்கிரமிப்பு

அந்தியூர் அருகே பிரம்மதேசத்தில் இருந்து சின்னக்குளம் ரோட்டில் 1¼ ஏக்கர் நிலம் நீரோடை புறம்போக்கில் இருந்தது. அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் 1¼ ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முயன்றனர். அப்போது அந்த இடத்தில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள பயிரை அறுவடை செய்த பின்னர் மீட்க வேண்டும். அதுவரை அவகாசம் அளிக்க வேண்டும் என அந்த தனி நபர் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்று மீட்பு நடவடிக்கையை கைவிட்டு சென்றனர். இதனிடையே அங்கு பயிரிடப்பட்டிருந்த பயிர் அறுவடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மீட்பு

இந்த நிலையில் அந்தியூர் மண்டல துணை வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்திருந்த 1¼ ஏக்கர் நிலத்தை மீட்டனர். மேலும் அந்த இடத்தில் நடப்பட்ட கற்கள் மற்றும் கம்பி வேலிகள் அகற்றப்பட்டன.

அந்த பகுதியில் மழை பெய்து நிலம் ஈரமாக இருந்ததால் ெபாக்லைன் எந்திரம் செல்ல முடியவில்லை. நிலம் காய்ந்தவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் நிலம் சமன் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்