ரூ.1½ கோடியில் மழை நீர் சேகரிப்பு குளம் புனரமைப்பு
ரூ.1½ கோடியில் மழை நீர் சேகரிப்பு குளம் புனரமைப்பு பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.;
காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு குளம் புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி உதவி பொறியாளர் சங்கர நாராயணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன், மாநகராட்சி கல்வி குழு தலைவர் விமலா, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பூஞ்சோலை சீனிவாசன், சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.