பொதுமக்கள் அளித்த மனு மீது கோட்டாட்சியர் விசாரணை

பொதுமக்கள் அளித்த மனு மீது கோட்டாட்சியர் விசாரணை

Update: 2022-07-21 18:32 GMT

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியில் நெமிலி சாலையை ஒட்டியுள்ள திடீா் நகர் பகுதியில் கடந்த 1996-ம் ஆண்டு ஆதிதிராவிடா் நலத்துறை சார்பில் தனிநபரின் இடத்தை வாங்கி வீடு இல்லாத ஆதிதிராவிட மக்களுக்கு தலா இரண்டு சென்ட் வீதம் 102 குடும்பங்களுக்கு வழங்கினர்.

ஆனால் இதுவரை கிராம வருவாய் கணக்கு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாததால் இந்த இடத்தை கிராம வருவாய் பதிவேட்டில் பதிவேற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் பல முறை மாவட்ட கலெக்டர் மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் உள்ளிட்ட பலருக்கும் மனு அளித்தும் அரசு அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இப்பகுதியை சோ்ந்த காவேரிப்பாக்கம் ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் துரைமஸ்தான் கடந்த தோ்தல் பிரசாரத்தின் போது பிரசாரத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டம் மூலம் மனு அளித்தார்.

இந்த மனு மீது உரிய விசாரணை நடத்திட மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டதை தொடா்ந்து ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, அரசு வழங்கிய வீட்டுமனையில் வீடுகட்டியுள்ள 34 குடும்பத்தினரை நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்து, அதன் விவரங்களை கிராம நத்தத்தில் பதிவேற்றம் செய்து பட்டா வழங்கிடுவதாக உறுதியளித்துள்ளார்.

இந்த ஆய்வின் போது வருவாய் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்