21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திரேஷன் கடை பணியாளர்கள் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை பணியாளர்கள் சிறுவிடுப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-04 18:45 GMT


பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், தமிழக அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தின் சார்பில் ஒரு நாள் சிறுவிடுப்பு போராட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தை சேர்ந்த 350-க்கும் மேற்பட்டோர் நேற்று பணிக்கு செல்லாமல் சிறுவிடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர். இதனால் சில கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் பணி பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் தனசேகரன் வரவேற்றார். இதில் மாவட்ட பொருளாளர் ரஷீத், துணைத்தலைவர்கள் பழனிவேல், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஸ்வரன், இணை செயலாளர்கள் கதிர்வேல், குணசேகரன், துரைராஜ், அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்