ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-04-05 19:00 GMT

தேனி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் பாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் வைரபெருமாள் முன்னிலை வகித்தார். இதில் ரேஷன் கடை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டு, மாநில தலைவரை தாக்கிய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்