மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ரேஷன் கடை விற்பனையாளர் பலி
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து ரேஷன் கடை விற்பனையாளர் பலியானார்.
இலுப்பூர் தாலுகா தென்னலூர் மேளக்கலத்தை சேர்ந்தவர் சண்முகம் மகன் பழனியப்பன் (வயது 39). இவர், வேலூரில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பழனியப்பன் வீட்டிற்கு செல்வதற்காக விராலிமலையில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் தென்னலூர் ஆத்துப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி பழனியப்பன் கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த பழனியப்பனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.