தாளவாடியை அடுத்த கரளவாடியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது ஸ்கூட்டரில் 3 மூட்டைகளில் 80 கிலோ ரேஷன் இருந்ததை போலீசார் கண்டனர். இதைத்தொடர்ந்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 'அவர் திகனாரை கிராமத்தை சேர்ந்த மாதேவா (வயது 43) என்பதும், தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாதேவாவை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ரேஷன் அரிசி, ஸ்கூட்டர் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.