நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று அம்பையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் 10 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 48) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.