நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 120 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2023-01-02 18:41 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 210 வழக்குகளை பதிவு செய்துள்ள போலீசார், 120 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அரசு குடோனில் ஒப்படைத்துள்ளனர்.

இதேபோல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதன்மூலம் அரசுக்கு ரூ.42 லட்சத்து 11 ஆயிரம் கிடைத்து உள்ளதாகவும் நாமக்கல் குடிமைபொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்