ரேஷன் அரிசி பறிமுதல்

ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-11-23 18:45 GMT

ஓசூர்

ஓசூரில் இருந்து கர்நாடகாவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாக கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார்கள் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் நேற்று, ரிங்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஓசூர் பாளையத்தை சேர்ந்த லட்சுமிகாந்த் (வயது26) என்பதும், உடன் வந்தவர் சூளகிரி அருகே கொடிதிம்மனப்பள்ளியை சேர்ந்த நவீன்குமார் (20) என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஓசூர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதையடுத்து, வேன் டிரைவர் உள்பட 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், ரேஷன் அரிசி, வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்