ராசிபுரம் அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ராசிபுரம் அருகே, வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2022-11-10 18:45 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனை

ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் மற்றும் கரட்டுப்பட்டி பகுதிகளில் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து விற்கப்படுவதாக நாமக்கல் மாவட்ட வழங்கல் அலுவலருக்கு புகார் சென்றது.

இதையடுத்து நேற்று மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ் தலைமையில் ராசிபுரம் வட்ட வழங்கல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கரட்டுப்பட்டி பகுதிக்கு சென்றனர். பின்னர் அங்குள்ள வீடுகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என்று சோதனையிட்டனர்.

தலைமறைவு

அதில் கரட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டின் முன்பு ரேஷன் அரிசி மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்தனர். சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதனை குடோனுக்கு அனுப்பி வைத்தனர்.

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் தலைமறைவானார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்