கோத்தகிரி,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. நூற்றாண்டு விழாவையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் வட்டார அளவில் சுகாதாரத்துறையினர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோத்தகிரி வட்டார சுகாதாரத்துறை சார்பில், ரத்ததான முகாம் கோத்தகிரி அரசு உதவி பெறும் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
முகாமை சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயகுமாரி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். முகாமில் கோத்தகிரி கஸ்தூரிபா நகரை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் உள்பட 70 பேர் ரத்ததானம் செய்தனர்.
இதில் கோத்தகிரி நுகர்வோர் சங்க தலைவர் நாகேந்திரன், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்துகொண்டனர்.