தளவாய்புரத்தில் ரத்ததான முகாம்
தளவாய்புரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.;
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ரத்ததான முகாமினை நடத்தினர். இதில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கியவர்களுக்கு 5 கிலோ அரிசிப்பை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ரத்ததான முகாமை ஏற்பாடு செய்த அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள். தொழில் வளர்ச்சிக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பார் என கூறினார். முகாமில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், துணை சேர்மன் விநாயகமூர்த்தி, அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.