வழக்கு போட்டு மிரட்ட முடியாது: பா.ஜனதா நிர்வாகிகள் யாருக்கும் அஞ்ச மாட்டார்கள் ராசிபுரத்தில் கே.பி.ராமலிங்கம் பேட்டி

வழக்கு போட்டு மிரட்ட முடியாது: பா.ஜனதா நிர்வாகிகள் யாருக்கும் அஞ்ச மாட்டார்கள் ராசிபுரத்தில் கே.பி.ராமலிங்கம் பேட்டி

Update: 2022-08-25 17:35 GMT

ராசிபுரம்:

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா ஆலய பூட்டை உடைத்ததாக முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நேற்று சேலம் மத்திய ஜெயிலில் இருந்து விடுதலையாகி ராசிபுரம் வந்த அவருக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. ராசிபுரம் பஸ் நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பாரதமாதா உருவப்படத்துக்கு கே.பி.ராமலிங்கம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சேதுராமன், வடிவேல், நாகராஜன், சத்யபானு, மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், மகளிர் அணி மாவட்ட தலைவர் சுகன்யா, மாவட்ட செயலாளர் திவ்யா, தேசிய பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் அரிகரன், ராசிபுரம் நகர தலைவர் வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில், எங்கள் மீது வழக்கு போட்டு மிரட்ட பார்க்கின்றனர். அது நடக்காது. பா.ஜனதா நிர்வாகிகள் யாரை கண்டும் அஞ்ச மாட்டார்கள். வரும் நாட்களில் பா.ஜனதா எழுச்சி எப்படி இருக்கும் என்பதை முதல்- அமைச்சர் பார்க்கத்தான் போகிறார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்