அரியவகை நட்சத்திர ஆமை மீட்பு

அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டது.;

Update: 2023-02-13 19:12 GMT

பாடாலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாட்டார்மங்கலம் மண் சாலையில் நேற்று அரிய வகை நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கண்ட அந்த வழியாக சென்ற இளைஞர்கள், அதனை பிடித்து வைத்து கொண்டு, பெரம்பலூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், அந்த நட்சத்திர ஆமையை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்