பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் மீது வழக்கு
செங்கோட்டை அருகே பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.;
செங்கோட்டை:
செங்கோட்டையை அடுத்த புளியரை அருகே உள்ள அங்கன் காலனியைச் சேர்ந்தவர் பதிபூரணம் மகன் சுரேஷ் (வயது 35). இவர் 50 வயது பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.