சிறுமி பாலியல் பலாத்காரம்
ஓசூர் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்
ஓசூர் அருகே கெலமங்கலம் பக்கமுள்ள பென்சபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் வயது23). டிரைவர். இவர் ஓசூர் காரப்பள்ளி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை தொடர்ந்து 6 மாத காலமாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது டிரைவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோசை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.