போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தனிப்பிரிவு ஏட்டுகள் இடமாற்றம்

குமாி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிாிவு ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update:2023-02-04 00:15 IST

நாகர்கோவில்:

குமாி மாவட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்பிாிவு ஏட்டுகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

குமரி, நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதா் சேரன்மாதேவிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். கருங்கல் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் சுசீந்திரத்துக்கும், சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி திருவட்டாருக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

இதேபோல கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ராமா, திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கும், திருநெல்வேலி தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இசக்கிமுத்து கருங்கல் போலீஸ் நிலையத்துக்கும், விளாத்திகுளம் இன்ஸ்பெக்டர் இளவரசு, மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

தனிப்பிரிவு ஏட்டுகள்

மேலும் குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் தனிப்பிரிவு ஏட்டுகளும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அந்த வகையில் கோட்டார் தனிப்பிாிவு போலீஸ் ஏட்டு மாதவன் ஆரல்வாய்மொழிக்கும், ஆரல்வாய்மொழி தனிப்பிரிவு ஏட்டு பாபு நேசமணிநகருக்கும், கன்னியாகுமரி தனிப்பிரிவு ஏட்டு முத்துராஜ் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், தென்தாமரைகுளம் தனிப்பிரிவு ஏட்டு சுபாஷ் கன்னியாகுமரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதோடு ராஜாக்கமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மகேஷ் தென்தாமரைகுளம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு ஏட்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்