பிளாஸ்டிக் ஒழிப்பு கட்டுரை போட்டியில் ராணிப்பேட்டை மாணவிகள் சாதனை
மாநில அளவிலான பிளாஸ்டிக் ஒழிப்பு கட்டுரை போட்டியில் ராணிப்பேட்டை மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.;
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் நோக்கத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநில அளவிலான விழிப்புணர்வு கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் கங்காதரா மேல்நிலைப் பள்ளி, ராணிப்பேட்டை சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் வன்னிவேடு மோட்டூர் அரசினர் உயர்நிலைப் பள்ளி மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் ராணிப்பேட்டை சிறுமலர் மடம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி தான்யாஸ்ரீ மாநில அளவில் இரண்டாம் இடமும், மாணவி நேகா சுமன் மூன்றாம் இடமும் பிடித்தனர். அந்த மாணவிகளை பாராட்டி ரூ.4000, ரூ.3000-க்கான காசோலை மற்றும் சான்றிதழை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். மேலும் போட்டிகளில் பங்கேற்ற பள்ளிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் உதவி பொது மேலாளர் மோகனவேல், ராணிப்பேட்டை சைல்டு லைன் 1098 மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், கிருபாகரன், லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.