ராமநாதபுரம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் சப்-ஜூனியருக்கான ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரத்தை சேர்ந்த நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவி கனிஷ்கா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். அதனை தொடர்ந்து அவருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது. சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பரிசு பெற்று பெருமை சேர்த்த மாணவியையும், பயிற்சி அளித்த சிலம்பம் மாஸ்டர் மேத்யு இமானுவேலையும் பொதுமக்கள் பாராட்டினர்.