மறைந்த ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி குடும்பத்தினரை சந்தித்து துக்கம் விசாரித்த பாஜக தலைவர் அண்ணாமலை
மறைந்த ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதியின் குடும்பத்தினரை பாஜக தலைவர் அண்ணாலை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம் சமஸ்தான ராஜா குமரன் சேதுபதி (வயது 56) மாரடைப்பால் கடந்த மாதம் 24-ம் தேதி உயிரிழந்தார். மறைந்த குமரன் சேதுபதி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் தக்காராகவும், மதுரை நான்காம் தமிழ் சங்கம் செந்தமிழ்கல்லுாரி தலைவராகவும் இருந்து வந்தார்.
கடந்த 8 மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அரண்மனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் சமஸ்தான ராஜா குமரன் சேதுபதியின் குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து உள்ளார். அவர் உடன் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.