ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை
கராத்தே போட்டியில் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.;
ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் மண்டல அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கும் 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு 7 முதல் பரிசு, 9 இரண்டாம் பரிசு, 16 மூன்றாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
2 காலம்.