ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா

ஆரணி ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

Update: 2023-03-31 14:42 GMT

ஆரணி

ஆரணி சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் விண்ணமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ராமச்சந்திரா சி.பி.எஸ்.இ. பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.

பள்ளியின் துணைத்தலைவர் எஸ்.ஆர்.சந்தோஷ்குமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமார் மற்றும் சொர்ணாம்பிகை சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பார்வல் கோலன் பிரெட்டன் வரவேற்றார்.

40 மாணவர்கள் யு.கே.ஜி. இருந்து 1-ம் வகுப்புக்கு செல்வதால் அவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது, கல்லூரி  படிப்பை முடிக்கும் போது எப்படி பட்டைய உடைகள் வழங்குவார்களே, அதே போல் மாணவர்களுக்கு பட்டய உடைகள் வழங்கப்பட்டன.

இதில் மாணவர்களின் பெற்றோர்களும், அவர்களின் உறவினர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்