வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி நிறைவு விழா
வந்தவாசியில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி நிறைவு விழா நடந்தது.;
வந்தவாசி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கவரைத்தெருவில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி உற்சவ நிறைவு விழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு உற்சவர் மூர்த்திகள் ராமர், லட்சுமணன், சீதை, மற்றும் சீனிவாச பெருமாள் சமேத பத்மாவதி தாயார், ஆண்டாள் தாயார் ஆகியோருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மூலவர் வீர ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு ராஜா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத் தொடர்ந்து பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.