ராமர் கோவில் கும்பாபிஷேகம்

குற்றாலம் அருகே நன்னகரத்தில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update:2023-02-03 00:15 IST

குற்றாலம் அருகே உள்ள நன்னகரத்தில் சீதா சமேத ராமச்சந்திர சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் கொண்ட பட்டாபிஷேக சிலை ஒரே கல்லில் அமைந்துள்ளது. மேலும் பரதன், சத்ருகன் தனித்தனி சிலையாகவும், ஆஞ்சநேயர் சிலை தனி சிலையாகவும் அமைந்துள்ளது. இந்த கோவிலை புனரமைத்து கோபுரம் அமைத்து தருமாறு இங்குள்ள அனைத்து சமுதாய மக்கள் தொழில் அதிபர் அய்யாதுரை பாண்டியனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். இதனை அவர் ஏற்று நிதி உதவி வழங்கி, திருப்பணிகள் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் தொழில் அதிபர் அய்யாதுரை பாண்டியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

முன்னதாக அவருக்கு திருப்பணி குழு தலைவர் பூதத்தான் பிள்ளை தலைமையில் கவுரவ தலைவர் கருப்பையா பிள்ளை, உறுப்பினர்கள் சுப்பிரமணியன், கண்ணன், ஆறுமுகம், முருகன், குத்தாலிங்கம், சங்கர், சங்கரராமன், சைலப்பபெருமாள், துரை, செயல் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Tags:    

மேலும் செய்திகள்