டெல்லியில் சாதி பாகுபாட்டுக்கு எதிராக பேரணி; திருமாவளவன் பங்கேற்பு

இந்துமதத்தை விட்டு 10,000 பேருடன் பவுத்த மதத்தை தழுவியதால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜேந்திர பால் கவுதமை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2022-10-15 16:39 GMT

டெல்லியில் சமீபத்தில் பவுத்த மத விழாவை முன்னின்று நடத்திய ராஜேந்திர பால் கவுதம், அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் காரணமாக தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்களுடன் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அம்பேத்கர் தேசிய நினைவு இல்லம் வரை சாதி பாகுபாடு மற்றும் தீண்டாமைக்கு எதிராக பேரணி நடத்தினார். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த தலித் தலைவர்கள் மற்றும் பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார். அம்பேத்கர் இல்லத்தில் சாதிவெறி மற்றும் தீண்டாமைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்