தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு ஊர்வலம்சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Update: 2023-04-14 19:00 GMT

தர்மபுரியில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அணிவகுப்பு ஊர்வலம்

தர்மபுரி ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளில் மத்திய அரசின் போக்கை கண்டித்து ஜனநாயகம் காப்போம் அணிவகுப்பு ஊர்வலம் தர்மபுரியில் நடைபெற்றது. தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலத்திற்கு கட்சியின் தலைமை நிலைய செயலாளரும், தர்மபுரி மாவட்ட மேலிட பார்வையாளருமான தகடூர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர்கள் ஜெயந்தி, ஜானகிராமன், மண்டல செயலாளர் நந்தன், மாவட்ட பொருளாளர் மன்னன், மாவட்ட துணை செயலாளர் மின்னல்சக்தி, தொகுதி செயலாளர்கள் சமத்துவன், சாக்கன்சர்மா, கருப்பண்ணன், தமிழ் அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் வரவேற்றார். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பி.பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி, டாக்டர் செந்தில்குமார் எம்.பி., காங்கிரஸ் மாவட்ட தலைவர் தீர்த்தராமன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குழு உறுப்பினர் மாரிமுத்து லிட்டர் கூட்டணி கட்சித் தலைவர்கள் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

உறுதிமொழி ஏற்பு

இந்த ஊர்வலம் நேதாஜி பைபாஸ் ரோடு வழியாக அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் முடிவடைந்தது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் தலைமை நிலைய செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வன் தலைமையில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கருத்தியலை உள்ளடக்கி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.ராமன், மாநில துணை செயலாளர்கள் கிள்ளிவளவன், அதியமான், செந்தில் குமார், அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் இளவரசன், மாவட்ட அமைப்பாளர் அம்பேத்வளவன், தொகுதி அமைப்பாளர் முரளி, ஒன்றிய செயலாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்