பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

Update: 2022-12-02 18:45 GMT

காரைக்குடி, 

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாக்கோட்டை ஒன்றியம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி காரைக்குடி புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.பேரணிக்கு சமூக நலத்துறை சத்தியபாமா தலைமை தாங்கினர். சாக்கோட்டை வட்டார மேலாளர் சுரேகா முன்னிலை வகித்தார். மாங்குடி, எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவர் முத்துதுரை ஆகியோர் ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். புதிய பஸ் நிலையம் அருகே தொடங்கிய ஊர்வலம் நூறடி சாலை வழியாக வந்து பெரியார்சிலையில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் நகர் மன்ற கவுன்சிலர்கள் முகமதுசித்திக், கார்த்திகேயன் உள்பட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்த வாசகங்களை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர். முடிவில் மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் விக்டர் பெர்ணான்டஸ் நன்றி கூறினார். முன்னதாக வணிக வளாக அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறையை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்