ராசிபுரத்தில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலம்

ராசிபுரத்தில் செவ்வாடை பக்தர்களின் கஞ்சிகலய ஊர்வலம்;

Update: 2022-08-19 16:19 GMT

ராசிபுரம்:

ராசிபுரத்தை சேர்ந்த ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் நேற்று கஞ்சிகலய ஊர்வலம் நடந்தது. ராசிபுரம் நித்திய சமங்கலி மாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் கச்சேரி தெரு, கவரை தெரு, கடைவீதி வழியாக சென்று மேட்டு தெரு பெருமாள் கோவிலில் உள்ள மன்றத்தில் முடிவடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் செவ்வாடை அணிந்து கஞ்சி கலயங்கள், முளைப்பாரி, வேப்பிலையை கையில் எடுத்து சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் ஓம்சக்தி, ஆதிபராசக்தி என்று கோஷமிட்டவாறு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்