ரஜ்புத் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

Update: 2023-08-01 19:30 GMT

ஓசூர்:-

தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்க மாநில பொதுக்குழு, செயற்குழு கூட்டம் மற்றும் குடும்ப விழா ஓசூரில் ரிங்ரோடு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் இந்தர்சிங் தலைமை தாங்கினார். மாநில தலைவர் பவானிசிங் முன்னிலை வகித்தார். இலவச மருத்துவ முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. .10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. பிளஸ்- 2 முடித்து விட்டு மேல்படிப்பை தொடர முடியாமல் தவித்த ஹேமலதாபாய் என்ற மாணவிக்கு ரூ. 20 ஆயிரம் உதவித்தொகையாக. வழங்கப்பட்டது.

இதில், தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் சார்பில் அறக்கட்டளை உருவாக்கி, ஏழை குழந்தைகளுக்கு படிப்பு மற்றும் மருத்துவ செலவிற்கு உதவி செய்வது என்றும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ராஜா தேசிங்கிற்கு மணிமண்டபம் கட்ட முயற்சி மேற்கொண்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜாதேசிங்கு மனைவி ராணிபாய்க்கு மணிமண்டபம் வேண்டும், ரஜ்புத் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், மாநில பொதுச்செயலாளர் பிரகாஷ், துணை தலைவர்கள் கஜேந்திரசிங், விஜயகுமார், சுரேஷ், பிரேம் மற்றும் ரஜ்புத் சமுதாயத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்