ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா
ஸ்ரீவைகுண்டத்தில் ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் நல்லக்கண்ணு தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட துணை தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் எடிசன், எம்.எல்.ஏ.வின் நேர்முக உதவியாளர் சந்திரபோஸ், ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி சந்திரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு, ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.