மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா; தஞ்சை பெரிய கோவிலில் 1,038 கலைஞர்கள் ஆடிய பரதநாட்டியம்
தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழனின் 1,308-வது சதய விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.;
தஞ்சை,
தஞ்சை பெரிய கோவிலை மாமன்னன் ராஜராஜ சோழன் 1,010-ம் ஆண்டு கட்டி முடித்து குடமுழுக்கு நடத்தினார். இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்வதோடு, இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் இருந்து வருகிறது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று பிறந்ததால் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதத்தில் வரும் சதய நட்சத்திரத்தன்று சதய விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,038 -ஆவது சதய விழா இன்று தொடங்குகிறது. சதய நட்சத்திர நாளான 25-ந்தேதி(நாளை) ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு தஞ்சையில் நாளை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று தஞ்சை பெரிய கோவிலில் ராஜராஜசோழனின் 1,308-வது சதய விழாவை முன்னிட்டு சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 1,038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.