ராஜா.ஜெயராமன் இல்ல திருமண விழா
ராஜா.ஜெயராமன் இல்ல திருமண விழா நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா.ஜெயராமன். இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. ஆசிரியை. இந்த தம்பதியின் மகன் திவாகருக்கும், சந்திரசேகரன்-கவிதா தம்பதியின் மகள் கீர்த்திகாவுக்கும் நேற்று முன்தினம் உடையார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் மாநில துணைத்தலைவர் ஜி.ராஜேந்திரன், மாவட்ட தலைவர் ஏ.சங்கர் உள்பட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.