ராஜகோபாலசாமி கோவில் குடமுழுக்கு
மகிழங்கோட்டை ராஜகோபாலசாமி கோவில் குடமுழுக்கு நடந்தது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம் அருகே உள்ள மகிழங்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ளது ராஜகோபாலசாமி கோவில். இந்த கோவிலில் குடமுழுக்கு நேற்று நடந்தது. முன்னதாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடந்தன. இதனையடுத்து நேற்று புனித நீர் கலசங்கள் மேளதாளங்கள் முழங்க எடுத்துவரப்பட்டு கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.