விருத்தாசலத்தில்மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி
விருத்தாசலத்தில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
விருத்தாசலம்,
விருத்தாசலம் பாலக்கரையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு நகர மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வம், துப்புரவு ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மழைநீர் சேகரிப்பதன் அவசியம் குறித்தும், அன்றாட தேவைகளுக்கு நீரை எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகம் செய்தனர்.