மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.;
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு வாகனம், விழிப்புணர்வு ஊர்வலம் ஆகியவற்றை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாகனம், ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி தனியார் கல்லூரி வரை சென்றது. இதில் கலந்து கொண்டவர்கள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பிக்கொண்டும் சென்றனர்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாக பொறியாளர் திருமால், உதவி நிர்வாக பொறியாளர் தேசிங்குராஜா, மகளிர் சுயஉதவிக்குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.