பந்தலூர் பகுதியில் மழை:சேறும்-சகதியுமாக மாறிய சாலையால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
பந்தலூர் பகுதியில் மழை:சேறும்-சகதியுமாக மாறிய சாலையால் விபத்து அபாயம்-உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்;
பந்தலூர்
பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, சேரம்பாடி, உப்பட்டி, பொன்னானி, மழவன்சேரம்பாடி, உள்பட தாலுகா பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மரங்களும் கிளைகளும் மின்கம்பிகள் மேல் சாய்ந்து கம்பிகள் உடைந்து மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, மழவன்சேரம்பாடி, உள்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இதனால் மழவன்சேரம்பாடி அருகே காளிகோவில் பகுதியில் சாலை சேரும் சகதியுமாக மாறியது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் ஒருசிலர் வழுக்கி விழும் நிலை ஏற்பட்டது. மேலும் வாகன விபத்துகளும் நடந்தது. இதனால் அங்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.