வானவில் மன்றம் தொடக்க விழா
தொழுப்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.;
செய்யாறு
தொழுப்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது.
செய்யாறு தாலுகா தொழுப்பேடு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வானவில் மன்றம் தொடக்க விழா நடந்தது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சங்கீதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வேண்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பரசுராமன் வரவேற்றார்.
விழாவில் அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணியன் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.