ராமேசுவரம் கோவில் பிரகாரத்தில் குளம் போல் தேங்கிய மழைநீர்...!

ராமேசுவரத்தில் பெய்த பலத்த மழையால் கோவில் பிரகாரத்தில் குளம் போல் மழைநீர் தேங்கியது.

Update: 2022-10-09 09:22 GMT

ராமேசுவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் நேற்று நள்ளிரவு 2 மணியில் இருந்து அதிகாலை வரையிலும் 2 மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.

பலத்த மழையால் ராமநாதசாமி கோவிலின் சாமி சன்னதி பிரகாரம் முழுவதும் மழை நீர் குளம் போல் அதிக அளவில் தேங்கி நிற்கின்றது.

இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் மழை நீரில் இறங்கி கஷ்டப்பட்டு நடந்தபடியே தரிசனம் செய்ய சென்றனர். மழைநீர் செல்லும் பாதைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளதால் செல்ல வழி இல்லாமல் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்