மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு
செட்டிப்புலம் மழை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு நடந்தது.;
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செட்டிப்புலம் கிராமத்தில் உள்ள மழை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தது. திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நேற்று முன்தினம் நடந்தது. முன்னதாக யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவை நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் கோவில் கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் மகா அபிஷேகமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், உபயதாரா்கள், திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கரியாப்பட்டினம் போலீசார் செய்திருந்தனர்.