சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை...!

சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது.

Update: 2023-05-01 17:22 GMT

சென்னை,

தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னையின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது. சென்னை சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்