சென்னையில் அதிகாலை முதல் லேசான மழை...!
சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.;
சென்னை,
வட உள் தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. கிண்டி, மாம்பலம், எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
அதேவேளை, கனமழை காரணமாக காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக திருவள்ளூர் மற்றும் ஊத்துக்கோட்டை தாலுக்காவிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.