திருச்சியில் இடியுடன் பெய்த மழை
திருச்சியில் இடியுடன் பெய்த மழை பெய்தது.;
திருச்சி:
குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அக்னிநட்சத்திரம் முடிந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கணிசமாக குறைய தொடங்கி உள்ளது. திருச்சியில் நேற்று பகல் பொழுதில் வெயிலின் தாக்கம் ஓரளவுக்கு இருந்தது. ஆனால் மாலைக்கு பிறகு பலத்த காற்று வீசியது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடும் சிரமம் அடைந்தனர். பின்னர் வானில் கருமேகம் திரண்டது. இதனைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் ஆங்காங்கே பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் பகல் நேரத்தில் இருந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.