திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்து. பின்னர் வானில் கரு மேகங்கள் சூழ்ந்து மாலை 6.30 மணி முதல் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அவ்வப்போது இடி, மின்னலும் ஏற்பட்டது. பின்னர் நேரம் செல்ல செல்ல மிதமான மழை பெய்தது. இந்த மழை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. மேலும் மாவட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.